ரயிலில் ஒரு திருடன் பெண்ணின் மொபைல் போனை திருட முயன்று, இறுதியில் பயணிகளிடம் தர்ம அடி வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயில் நிலையத்தில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், மர்ம நபர் ஒருவர் திடீரென போனை பறிக்க முயன்றார்.
ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் திருடனின் கையை இறுகப் பிடித்துக்கொண்டார். அங்கிருந்த மற்ற பயணிகளின் உதவியுடன் திருடனை ஜன்னல் வழியாக ரயிலுக்குள் இழுத்த பெண் மற்றும் பயணிகள், அவனுக்கு அங்கேயே ஒரு பாடம் புகட்டினர். பெரும் போராட்டத்திற்குப் பிறகு அந்தத் திருடன் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடினான்.
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. “வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் இப்படி ஆகிவிட்டதே” எனப் பலரும் கிண்டலாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வீடியோவை உன்னிப்பாகக் கவனித்த சில பயனர்கள், இது உண்மையில் நடந்த சம்பவம் அல்ல, ஒரு நாடகம் என்று கூறுகின்றனர்.
View this post on Instagram
“>
திருடன் ஜன்னல் வழியாக இழுக்கப்படும்போது அவன் தானாகவே உள்ளே குதிப்பது போலத் தெரிவதால், இது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோவாக இருக்கலாம் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
