உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கும் ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான், ஒரு தாயின் கண்முன்னே அவரது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஆர்யமான் கைது செய்யப்பட்டாலும், அடுத்த சில மணிநேரங்களிலேயே அவர் ஜாமீனில் வெளியே வந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

​இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதில், “காவல்துறையினர் திட்டமிட்டே ஆர்யமானுக்குச் சாதகமாகச் சாதாரண சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால்தான் அவர் மிக எளிதாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்” என்று கண்ணீர் மல்க குற்றம் சாட்டியுள்ளார். அதிகார பலத்தால் குற்றவாளி தப்பிக்கவிடப்பட்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.