சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தமாகப் பாட்டு கேட்பது, வீடியோ பார்ப்பது அல்லது உரத்த குரலில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறையை மீறும் பயணிகளிடம் இருந்து ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம், கோயம்பேடு, எழும்பூர் மற்றும் சென்ட்ரல் போன்ற முக்கியப் பகுதிகளை இணைக்கும் வழித்தடங்களில் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பயணிகளின் வசதியையும், ரயிலுக்குள் அமைதியான சூழலையும் உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இனி மெட்ரோவில் பயணம் செய்யும்போது செல்போன் உபயோகிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்!
