சமூக வலைதளங்களில் ஒரு ஆபத்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஓடிக்கொண்டிருக்கும் தார் (Thar) காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு இரண்டு இளம் பெண்கள் பயணம் செய்துள்ளனர். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்கள் இருவரும் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கார் வேகமாகச் செல்லும் போது நிலைதடுமாறிய ஒரு பெண், திடீரென காரிலிருந்து பின்னோக்கிச் சரிந்து நடுரோட்டில் விழுந்தார்.

​நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் போது, அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று அந்தப் பெண்ணை மீட்டனர். போதை மற்றும் கவனக்குறைவால் செய்யப்பட்ட இந்த ஆபத்தான செயல் பெரும் விபத்தில் முடிந்திருக்கக் கூடியது. இந்த வீடியோ ‘X’ தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இளைய தலைமுறையினர் லைக்ஸ்களுக்காகவும் போதை மயக்கத்திலும் தங்கள் உயிரோடு விளையாடுவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.