தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பணிகளை அதிரடியாகத் தொடங்கியுள்ளார். இன்று தொகுதியில் உள்ள தேர்தல் பணிமனைக்கு நேரில் சென்ற அவர், அங்கிருந்த பெண் நிர்வாகிகளுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். அப்போது, கட்சியின் சின்னமான ‘விசில்’ சின்னத்தை அவர்களுடன் சேர்ந்து தரையில் கோலமாக இட்டு, தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

​தலைவரின் இந்த எளிமையான செயல் பெரம்பூர் தொகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுடன் இணைந்து கோலமிட்ட விஜய்யின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன. விஜய்யின் இந்த ‘கிரவுண்ட் லெவல்’ அரசியல் அணுகுமுறை, வரும் தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தரும் எனத் தமிழக வெற்றி கழகத்தினர் மிகுந்த நம்பிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர்.