தமிழக தேர்தல் பரப்புரையில் அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான விந்தியா, பாமக மற்றும் அன்புமணி ராமதாஸ் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். ‘சூர்யவம்சம்’ திரைப்படத்தில் அப்பா சரத்குமார் கதாபாத்திரம், சுற்றியிருப்பவர்கள் சொன்னதைக் கேட்டு மகனை வீட்டை விட்டு வெளியேற்றுவது போல, ராமதாஸும் தனது மகன் அன்புமணியை வெளியே அனுப்பிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​இருப்பினும், அந்தத் திரைப்படத்தில் தந்தை விரட்டியடித்தாலும் மகன் எப்படித் தனியாகப் போராடி முன்னுக்கு வந்து தனது தந்தையின் பெயரைக் காப்பாற்றினாரோ, அதேபோல அன்புமணியும் தனது தந்தை ராமதாஸின் கொள்கைகளையும் பெயரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று அவர் பேசினார். அதிமுக மேடையில் ஒரு மாற்றுக்கட்சித் தலைவரைப் பாராட்டும் விதமாகவும், அதே சமயம் தந்தை-மகன் உறவைச் சினிமாவுடன் ஒப்பிட்டும் விந்தியா பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.