இந்தியாவில் டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. தெருவோரக் கடையில் 10 ரூபாய்க்கு டீ குடிப்பது முதல் பெரிய ஹோட்டல்களில் குடிப்பது வரை பல ரகங்கள் உண்டு. ஆனால், ஒரு சொகுசு காரில் அமர்ந்து, ரெட் கார்பெட் வரவேற்புடன் 1000 ரூபாய்க்கு டீ குடிப்பது பற்றி யாராவது யோசித்திருப்பார்களா? சமூக வலைதளங்களில் பிரபலமான ஒரு இன்ஃப்ளூயன்சர் இந்த விசித்திரமான ஐடியாவை நிஜமாக்கி காட்டியுள்ளார்.
சுமார் 1 லட்சம் ரூபாய் செலவில் ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்து, அதற்கு முன் ரெட் கார்பெட் விரித்து, ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் சர்வர் போலவே உடை அணிந்து அவர் இந்த டீ விற்பனையைத் தொடங்கியுள்ளார். 1000 ரூபாய் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் டீ மற்றும் பிஸ்கட் வழங்கப்படுவதோடு, அந்த சொகுசு காரில் ஒரு சிறிய ‘ரைடு’ (Ride) அழைத்துச் செல்லப்படுவதும் இதன் சிறப்பம்சம்.
இந்த வித்தியாசமான முயற்சியைப் பார்த்த மக்கள் ஆச்சரியமடைந்து ஆர்வமுடன் டீ குடித்து மகிழ்ந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
