மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் தனது ஹெட்போனை வீட்டில் மறந்துவிட்டதால், அதற்குப் பதிலாக ஸ்டெதாஸ்கோப்பைப் பயன்படுத்தி செல்போனில் ரீல்ஸ் பார்க்கும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செல்போனின் ஸ்பீக்கர் பகுதியில் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து, அதன் மூலம் வரும் ஒலியைக் கேட்டு அவர் ரசிப்பது பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
“இதற்குப் பெயர்தான் மருத்துவ மூளை” என்றும், “மாணவர்களின் சமயோசித புத்திக்கு அளவே இல்லை” என்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை கிண்டலாகப் பகிர்ந்து வருகின்றனர்.
ஹெட்போனை மறந்துவிட்டதால் ஸ்டெதாஸ்கோப்பில் ரீல்ஸ் பார்க்கும் மருத்துவக்கல்லூரி மாணவர்#Stethoscope #Headphone #Medico #ViralWatch #Oneindia #OITamil #OIReel pic.twitter.com/SM9CRfL6is
— Oneindia Tamil (@thatsTamil) April 16, 2026
“>
கஷ்டமான மருத்துவப் படிப்பிற்கு நடுவிலும் மாணவர்கள் இது போன்ற சின்னச் சின்ன சேட்டைகள் மூலம் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
