சமீபத்தில் சமூக வலைதளங்களில் அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பாட்டியின் முடிவெட்டும் வீடியோ வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வழக்கமாக முடி வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் கத்தரிக்கோல் அல்லது ட்ரிம்மர் போன்ற எந்தவொரு நவீனக் கருவிகளும் இல்லாமல், வடகிழக்கு இந்தியாவின் பழங்குடியினரால் பயன்படுத்தப்படும் பாரம்பரியப் பெரிய கத்தியைக் கொண்டு அந்தப் பாட்டி மிகவும் நேர்த்தியாக முடி வெட்டுகிறார்.
எவ்விதப் பயமும் இன்றி, அசாத்தியமானக் கைத்தேர்ச்சியோடு அவர் முடி வெட்டும் இந்த வீடியோ இணையவாசிகளிடையே ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் ஆதி மற்றும் நைஷி உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின வெட்டுக்கத்தி அவர்களின் அன்றாட வாழ்வியலோடு இணைந்த ஒரு முக்கியக் கருவியாகும்.
பழங்காலத்தில் நவீன கத்தரிக்கோல்கள் புழக்கத்தில் இல்லாதபோது, தலைமுடியை ஒரு மரக்கட்டை அல்லது தடிமனான குச்சியின் மீது வைத்து, கூர்மையான கத்தியால் கவனமாகத் தட்டிச் சமமாக வெட்டும் நுட்பத்தைப் பின்பற்றி வந்தனர். அந்தப் பழங்கால பாரம்பரிய முறையைச் சிறிதும் பிசகாமல், அளப்பரிய கவனத்துடனும் திறமையுடனும் அந்தப் பாட்டி செய்து காட்டுவது அவர்களின் தொன்மையான வாழ்வியல் கலைக்குச் சான்றாக உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி, லட்சக்கணக்கான மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பார்ப்பதற்கு ஆபத்தானதாகத் தோன்றும் ஒரு கருவியை, இவ்வளவு துல்லியமாகவும் கலைநயத்தோடும் பயன்படுத்தும் அந்தப் பாட்டியின் திறமையை மக்கள் வியந்து பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்திலும், வடகிழக்கு இந்திய மக்களின் பாரம்பரிய அறிவும், அவர்களின் தனித்துவமானக் கலாசார அடையாளங்களும் அழியாமல் உயிர்ப்போடு இருப்பதை இந்த வைரல் சம்பவம் உலகுக்கு உணர்த்துகிறது.
See this Instagram video by @pepa.assam https://t.co/tJmF2tDQno
“>
