உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மற்றும் ஹாப்பூர் மாவட்டங்களில் நிகழ்ந்த அடுத்தடுத்த விபத்துகள் மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளன. உன்னாவ் மாவட்டத்தின் நாவல்கஞ்ச் பகுதியில், சாலையோரம் உள்ள ஒரு சிறிய கடையின் அருகே நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அதிவேகமாக வந்த டம்பர் லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அந்தக் கடையின் மீதே கவிழ்ந்தது. இந்த விபத்தின் கோரம் எந்த அளவுக்கு இருந்ததென்றால், அங்கிருந்த நபர்கள் பல மீட்டர் தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
उन्नाव
➡नेवलगंज हादसे का LIVE वीडियो आया सामने
➡दर्दनाक हादसे का वीडियो देख रोंगटे हुए खड़े
➡रोड के किनारे 4 लोगों पर पलटा था डंपर
➡हादसे में 2 की दर्दनाक मौत,2 का इलाज जारी
➡आरोपी चालक को पुलिस गिरफ्तार कर चुकी
➡हसनगंज कोतवाली के नेवलगंज का मामला#Unnao #RoadAccident… pic.twitter.com/SsiLez3Vnt— भारत समाचार | Bharat Samachar (@bstvlive) April 14, 2026
இந்த நெஞ்சைப் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மற்றொரு துயரச் சம்பவமாக, ஹாப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் திருமணக் குழுவினர் சென்ற பேருந்து மீது லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியதுடன், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மணமகனின் தந்தை யூனுஸ் குரேஷி உட்பட 6 பேர் உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு விபத்துகளுமே ஓட்டுநர்களின் அஜாக்கிரதையால் நேர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதிய நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
