தொழிலாளர்கள் தங்கள் தலையில் கேமராக்களை அணிந்து வேலை செய்யும் வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி AI தொழில்நுட்பம் குறித்த புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் ஒவ்வொரு கை அசைவுகளையும் துல்லியமாகப் பதிவு செய்து, அதே வேலைகளைச் செய்ய ரோபோக்களுக்குப் பயிற்சியளிக்க இந்தத் தரவுகள் (Data) பயன்படுத்தப்படுகின்றன.

“தனது வேலைக்கே உலை வைக்கப்போகும் இயந்திரங்களுக்குத் தொழிலாளர்களே பயிற்சியளிக்கும் அவலம் இது” எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எதிர்காலத்தில் இது வேலைவாய்ப்பைப் பறிக்கும் ஒரு ஆபத்தான வளர்ச்சியா அல்லது தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டமா என்ற விவாதம் தற்போது உலக அளவில் சூடுபிடித்துள்ளது.