மொபைல் திருடச் சென்ற இடத்தில் கடைக்குள்ளேயே திருடர்கள் சிக்கிக்கொண்ட சுவாரசியமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடையின் ஷட்டரைத் தூக்கிவிட்டு உள்ளே நுழைந்த திருடர்களை, கவனித்த ஒரு நபர் சாமர்த்தியமாக வெளியிலிருந்து ஷட்டரை இழுத்துப் பூட்டியுள்ளார். உள்ளே மாட்டிக்கொண்ட திருடர்கள் வெளியே வர முடியாமல் கதறும் காட்சிகள் பார்ப்போரைச் சிரிக்க வைக்கின்றன.

​இந்தச் சம்பவத்தின் வீடியோ எக்ஸ் தளத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருடர்களின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி அவர்களைச் சிறைபிடித்த அந்த நபரின் சமயோசித புத்தியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “திருடச் சென்ற இடத்தில் திருடர்களுக்கே ஆப்பு” என இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.