பெங்களூரு நகரின் மோசமான உள்கட்டமைப்பை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் நடந்து சென்ற நபர் ஒருவர், சாக்கடையின் மேல் போடப்பட்டிருந்த சிமெண்ட் பலகை (Slab) மீது கால் வைத்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அந்த பலகை பலவீனமாக இருந்ததால், அவர் கால் வைத்த உடனேயே உடைந்து சரிந்தது. இதனால் அந்த நபர் நிலைதடுமாறி அப்படியே சாக்கடைக்குள் விழுந்தார்.
खस्ताहाल स्लैब पर रखा पैर, नाले में जा गिरा शख्स
सोशल मीडिया पर एक वीडियो वायरल हो रहा है जिसमें एक शख्स नाला पार करने के दौरान स्लैब में पैर रखता है और नाले में गिर जाता है. वीडियो को बेंगलुरू का बताया जा रहा है.#ViralVideo pic.twitter.com/ootIVFbGrn
— NBT Hindi News (@NavbharatTimes) April 13, 2026
இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. “நடந்து செல்லும்போது கூட கவனமாக இருக்க வேண்டும்” என இந்த வீடியோவை பகிர்ந்து பலரும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயம், நகரின் மோசமான பராமரிப்பு குறித்து பெங்களூரு மாநகராட்சி மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
