இன்டர்நெட் கஃபே ஒன்றில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆர்வமாக கணினியில் கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது நடந்த சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்குப் பக்கத்தில் உள்ள கணினியைப் பயன்படுத்த வந்த ஒரு பெண், எதிர்பாராதவிதமாக இந்த இளைஞரின் கணினி சுவிட்சை ஆஃப் செய்துவிடுகிறார். இதனால் கடுப்பாகாமல் அந்த இளைஞர் அமைதியாக மீண்டும் கணினியை ஆன் செய்து விளையாடத் தொடங்குகிறார்.

​ஆனால், சிறிது நேரத்திலேயே அந்தப் பெண் மீண்டும் அதே தவறைச் செய்து அந்த இளைஞரின் கணினியை ஆஃப் செய்கிறார். பொதுவாக கேம் விளையாடும்போது இடையூறு ஏற்பட்டால் பலரும் கோபப்படுவார்கள், ஆனால் அந்த இளைஞர் எந்தவித ஆத்திரமும் அடையாமல் பொறுமையாக இருந்த விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘பொறுமையின் சிகரம்’ எனப் பலரால் பகிரப்பட்டு வருகிறது.