பெட்ரோல் பங்க் ஒன்றில் கார் ஓட்டுநருக்கும் இரு நபர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், தனது தந்தையைத் தாக்கியவர்களை ஒரு சிறுமி துப்பாக்கியால் சுட்ட அதிரடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏப்ரல் 7, 2026 எனத் தேதியிடப்பட்ட அந்த சிசிடிவி காட்சியில், காரில் இருந்து இறங்கிய இருவர் கார் ஓட்டுநருடன் தகராறு செய்வதும், திடீரென ஒருவன் ஓட்டுநரின் கன்னத்தில் அறைவதும் தெரிகிறது.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஓட்டுநரின் மகள், தந்தைக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் மின்னல் வேகத்தில் காரின் உள்ளே இருந்த துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.

தந்தை தடுப்பதற்குள்ளாகவே அந்தச் சிறுமி, அவரைத் தாக்கிய நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் இதைப் பார்த்துள்ளனர்.

“>

 

தனது தந்தையைத் தற்காக்க அந்தச் சிறுமி காட்டிய துணிச்சலைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், “கடவுள் கொடுத்தால் இப்படி ஒரு வீரமான மகளைக் கொடுக்க வேண்டும்” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.