ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் திரைத்துறையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “இது ஒரு விபத்தல்ல, தணிக்கை செய்வதில் ஏற்பட்ட அதிகப்படியான காலதாமதமே இத்தகைய சட்டவிரோத செயல்களுக்கு வழிவகுத்துள்ளது” என்று அமைப்பின் தோல்வியைச் சாடியுள்ளார்.
மேலும், கலைஞர்களின் உழைப்பையும் தயாரிப்பாளர்களின் முதலீட்டையும் பாதிக்கும் இச்செயலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரசிகர்கள் இப்படத்தைத் திரையரங்குகளில் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல்ஹாசனைத் தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் சூர்யா ஆகியோரும் இதற்குத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். ரஜினிகாந்த் தனது பதிவில், அரசு உடனடியாக இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் சூர்யா, ஒரு முழு குழுவின் உழைப்பு இப்படி வீணடிக்கப்படுவது அநீதியானது என்று வருத்தம் தெரிவித்ததுடன், திருட்டுத் தனமாக வெளியான லிங்குகளைப் பகிரவோ, பார்க்கவோ வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இப்படத்திற்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
