விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்களால் வெளியாகாத நிலையில், நேற்று முழு படமும் இணையதளத்தில் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் எடிட் மார்க்குகள் உள்ள உயர்தர பதிப்பு வெளியாகியுள்ளதால், படக்குழுவைச் சேர்ந்தவர்களே இதை கசியவிட்டிருக்கலாம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
குறிப்பாக, அரசியல் ஆதாயத்திற்காகவும் அனுதாபத்தை தேடவும் விஜய்யின் தவெக கட்சியினரே திட்டமிட்டு இதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 600 கோடி ரூபாய் முதலீடு செய்த தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா கடும் அதிர்ச்சியில் உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் போன்றோர் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் மறுபுறம், ‘துப்பாக்கி’ படத்தைப் போலவே இந்தப் படத்திலும் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய சர்ச்சை காட்சிகள் இருப்பதால்தான் சென்சார் போர்டு சொன்னபடி மறுதணிக்கைக்குச் செல்லாமல் படக்குழுவினர் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
தேர்தலில் தனக்கு மவுசு குறைந்துவிடக் கூடாது என்பதற்காகவும், தணிக்கை சிக்கல்களைத் தவிர்க்கவும் படத்தை கசியவிட்டதாகத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இணையதளத்தில் பரவி வரும் திருட்டு லிங்குகளைப் பகிர வேண்டாம் என்று தயாரிப்பு நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது
