19-வது ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கவுகாத்தியில் நேற்று பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்த போதிலும், ராஜஸ்தான் அணி 18 ஓவர்களிலேயே 202 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தத் தோல்வி குறித்துப் பேசிய பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தாலும் 202 ரன்கள் எடுத்தது நல்ல முன்னேற்றம் என்று கூறினார்.

ஆனால், ராஜஸ்தான் அணி பவர்பிளே ஓவர்களில் மிகச் சிறப்பாக விளையாடியதாகவும், குறிப்பாக வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐபிஎல் போன்ற தொடர்களில் தவறுகள் நடப்பது இயல்பு என்றும், அதிலிருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டிகளில் முன்னேறுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.