19-வது ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 201 ரன்கள் குவித்தது. கடினமான இந்த இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி, 18 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததுடன், ஆட்டநாயகன் விருதையும் வென்றார். வெற்றிக்குப் பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி, தான் பயிற்சியில் மேற்கொண்ட அதே யுக்திகளை ஆட்டத்திலும் செயல்படுத்தியதாகத் தெரிவித்தார்.

பந்து வீசுவது யார் என்பதைப் பற்றி கவலைப்படாமல், பந்தை மட்டும் கவனித்து விளையாடியதே தனது அதிரடிக்குக் காரணம் என்று அவர் கூறினார். தனது வழக்கமான ஆட்ட முறையை முழுமையாக நம்பி விளையாடியது நல்ல பலனைத் தந்துள்ளதாக அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.