இன்றைய டிஜிட்டல் யுகத்தில், சமூக வலைதளங்களில் லைக்ஸ்களையும் ஃபாலோயர்களையும் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்துவிடுகிறார்கள். அந்த வகையில், வேல்ஸ் பகுதியில் உள்ள பிரபல மலைப்பகுதியில் இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் செய்த வேலை இணையத்தில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனது வீடியோவிற்காக மலை உச்சிக்கு ஒரு பிளாஸ்டிக் ‘பாட்டப்’பை எடுத்துச் சென்ற அந்த நபர், அங்கு கண்டென்ட் எடுத்து முடித்த பிறகு, அதை அங்கேயே வீசிவிட்டு வந்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதியை இவ்வாறு குப்பையாக்கிச் சென்ற செயல் சுற்றுசூழல் ஆர்வலர்களையும் உள்ளூர் மக்களையும் கடுமையாக ஆத்திரமடையச் செய்துள்ளது.
இயற்கை வளத்தைச் சீரழிக்கும் வகையில் செய்யப்பட்ட இந்தச் செயலின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அந்த நபருக்கு எதிராக இணையவாசிகளின் கண்டனக் கணைகள் குவியத் தொடங்கின.
விளம்பரத்திற்காகப் பொதுச் சொத்தையும் இயற்கை அழகையும் பாழ்படுத்துவது நியாயமா என்று பலரும் கேள்வி எழுப்பினர். வீடியோவில் ‘ட்ரெண்ட்’ ஆக வேண்டும் என்ற சுயநலத்திற்காக, மலையின் எழிலையும் அங்கு வாழும் வன உயிரினங்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிய அந்த இன்ஃப்ளூயன்ஸரின் பொறுப்பற்றத்தனத்தை நெட்டிசன்கள் மிகக் கடுமையாக விமர்சித்துத் தீர்த்தனர்.
இந்தச் சூழலில், அங்கிருந்த குப்பையை அகற்றி அந்த மலையை மீண்டும் பழமைக்குக் கொண்டுவர உள்ளூர் ரக்பி விளையாட்டு வீரர்கள் களமிறங்கினர். தங்களின் சிறப்பான முயற்சியால் அந்த மலையேறி, அங்கிருந்த பாட்டப்பை வெற்றிகரமாக அகற்றி மீட்டெடுத்தனர்.
இந்த ரக்பி வீரர்களின் ஹீரோத்தனமான மற்றும் பொறுப்பான இந்தச் செயலுக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஒருபுறம் சுயநல இன்ஃப்ளூயன்ஸரின் செயல் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் ரக்பி வீரர்களின் இந்தச் தூய்மைப் பணி இணையத்தில் பலரின் இதயங்களை வென்று நேர்மறை அலையை உருவாக்கியுள்ளது.
See this Instagram video by @_tom_christopher https://t.co/lliwJ5Jduv
“>
