புதுக்கோட்டையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரம் வெள்ளரிப்பிஞ்சு விற்றுக் கொண்டிருந்த பெண்ணை அழைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பரப்புரை வாகனத்தில் சென்றுகொண்டிருந்த விஜய், அந்தப் பெண்ணைக் கண்டதும் உடனடியாக நிறுத்தி அவரை அருகில் அழைத்தார்.

​பின்னர், அவரிடமிருந்து வெள்ளரிப்பிஞ்சுகளைப் பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தையும் வழங்கினார். எளிய வியாபாரியின் உழைப்பை மதித்து விஜய் செய்த இந்தச் செயல் அங்கிருந்த தொண்டர்களை நெகிழ வைத்தது. இது தொடர்பான காணொளி தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.