தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராகப் போட்டியிடும் சவுமியா அன்புமணி, வாக்காளர்களைக் கவர தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகள்கள் சங்கமித்ரா மற்றும் சம்யுத்ரா ஆகிய இருவரும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
தருமபுரி தொகுதி முழுவதும் வீடு வீடாகச் சென்ற மகள்கள் இருவரும், தங்கள் தாயாருக்காகத் தீவிரமாக வாக்கு சேகரித்தனர். அப்போது, தருமபுரி தொகுதியில் பாமக சார்பில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்த துண்டுப் நோட்டீஸ் களைக்பொதுமக்களிடம் வழங்கி, தங்கள் தாயாருக்கு ஆதரவு கோரினர்.
குடும்ப உறுப்பினர்களே தேர்தல் களத்தில் இறங்கி வாக்கு சேகரிப்பது அந்தப் பகுதியில் உள்ள தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
