மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தனக்குச் சொந்தமாக வீடோ, நிலமோ அல்லது எந்தவொரு வாகனமோ இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரது கையிருப்பில் ரூ. 75,700 ரொக்கப்பணம் இருப்பதாகவும், வங்கிக் கணக்குகளில் சுமார் ரூ. 12.36 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அவரிடம் 9.75 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மட்டுமே உள்ளன, அதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 1.75 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மம்தா பானர்ஜியின் மொத்த அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 15.37 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகங்களுக்கான ராயல்டி மற்றும் வங்கி வட்டி ஆகியவையே தனது முதன்மை வருமான ஆதாரங்கள் என்று அவர் பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அவர்கள் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதிலும், எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வரும் மம்தா பானர்ஜியின் இந்த சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.