தனது மகளை ஸ்கூட்டியில் அழைத்துக்கொண்டு சென்ற ஒரு நபருக்கு, எதிர்பாராத விதமாக 4 நாய்களால் ஆபத்து ஏற்பட்டது. 2 வளர்ப்பு நாய்கள் மற்றும் 2 தெரு நாய்கள் விடாமல் துரத்தி அந்த நபரைத் தொந்தரவு செய்த நிலையில், பயந்துபோய் வேகமெடுக்காமல் தனது மகளின் பாதுகாப்பைக் கருதி அவர் ஸ்கூட்டியை நிறுத்தினார்.

 

நாய்களை விரட்டுவதற்காக அவர் தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு வந்த வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள், நாய்களைக் கட்டுப்படுத்தாமல் அந்த நபர் மீது பாய்ந்து சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். தன் கண்முன்னே தந்தை தாக்கப்படுவதைக் கண்டு அந்தச் சிறுமி கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது.

நாய்களின் உரிமையாளர்களின் இந்த அராஜகப் போக்கு தற்போது சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்திற்கு உள்ளாகி வருகிறது. ‘நாய்கள் முக்கியமா? மனித உயிர் முக்கியமா?’ என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.