இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த ரஷ்யப் பெண் அலிசா, தான் பயணித்த இந்திய நகரங்களின் பாதுகாப்பு குறித்து வெளியிட்ட ரேட்டிங் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவர் வட இந்தியாவின் மலைப்பிரதேசங்கள் மிகவும் பாதுகாப்பானவை என்று பாராட்டிய அதே வேளையில், நாட்டின் தலைநகரான டெல்லிக்கு 10-க்கு வெறும் 2 மதிப்பெண்களை மட்டுமே வழங்கி அதிரடி காட்டியுள்ளார்.

​டெல்லி மற்றும் ஆக்ரா போன்ற நகரங்களில் வெளிநாட்டுப் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பல இந்தியர்களே “டெல்லிக்கு 2 மார்க் கொடுத்ததே அதிகம்” என்று அலிசாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.