உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், 17 வயது சிறுமி ஒருவர் நடுரோட்டில் விழுந்து கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அந்தச் சிறுமி கூட்டத்திற்கு நடுவே அலறியதோடு, ‘மகாராஜ்’ என்பவரே தன்னைச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
"महाराज ने मेरा रेप किया है"
मथुरा में ये लड़की रोते हुए एक महाराज पर रेप करने का आरोप लगा रही है। पुलिस जांच कर रही है। pic.twitter.com/kOumNe8ZVM— Sachin Gupta (@Sachingupta) April 7, 2026
இருப்பினும், இந்த வழக்கில் போலீசாருக்கு மற்றொரு கோணமும் கிடைத்துள்ளது. அந்தச் சிறுமியின் தாய்க்கும், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கும் இடையே சுமார் 15 லட்ச ரூபாய் பணப்பரிமாற்றம் மற்றும் வீடு தொடர்பான சொத்து தகராறு நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. எனவே, இது உண்மையான பாலியல் புகாரா அல்லது பணத்தகராறு காரணமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்தச் சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
