தர்மபுரியில் இருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் ‘FASTAG’ (ஃபாஸ்டேக்) கார்டு முறையாக வேலை செய்யாததன் காரணமாக, மத்தூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் அனைவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான தவிப்புக்குள்ளாகியுள்ளனர். டோல்கேட்டை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டதால், பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டு, பயணிகள் செய்வதறியாது அவதிப்படும் நிலை உருவானது.
தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ளும் இதுபோன்ற அரசுப் பேருந்துகளைப் பணிமனையில் (டிப்போ) இருந்து புறப்பட அனுமதிக்கும் முன்பாகவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முறையாக ஆய்வு செய்வதில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஃபாஸ்டேக் கணக்கில் போதிய பணம் உள்ளதா, அது சரியாக வேலை செய்கிறதா என்பதை முன்கூட்டியே சரிபார்க்காமல் அலட்சியமாக அனுப்புவதால்தான், நடுவழியில் மக்கள் இப்படி அவதிப்பட வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
