பிரபல மராத்தி நடிகர் மிலிந்த் குணாஜியின் மகன் அபிஷேக் குணாஜி, தனது 15வது வயதிலேயே மேற்படிப்பிற்காக லண்டனுக்குச் சென்றுள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் இருந்தே சொந்தக்காலில் நிற்க விரும்பிய அவர், தனது தந்தை ஒரு பெரிய நடிகராக இருந்தபோதிலும், அவரின் பின்னணியையோ அல்லது பணத்தையோ பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. லண்டனில் தங்கியிருந்தபோது தனது சொந்தச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, அபிஷேக் அங்குள்ள ஒரு ஹோட்டலில் ஒரு மணி நேரத்திற்கு 4,500 ரூபாய் சம்பளத்தில் பகுதி நேரமாக வேலை செய்துள்ளார்.

நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு பிரபலத்தின் மகன், இவ்வளவு எளிமையாகவும் உழைப்பை நம்பியும் வாழ்ந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தனது மகனின் இந்தத் துணிச்சலான முடிவு குறித்துப் பேசிய நடிகர் மிலிந்த் குணாஜி, “அவனுடைய இந்த முடிவைக் கேட்டு ஆரம்பத்தில் நானும் எனது மனைவியும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அதே நேரத்தில் அவனது சுயமரியாதையை எண்ணி பெருமைப்பட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தந்தையின் நிழலில் வாழாமல், லண்டனில் கடினமாக உழைத்துத் தனது சொந்த முயற்சியால் முன்னேறிய அபிஷேக், தற்போது மராத்தித் திரையுலகில் ஒரு திறமையான இயக்குநராகவும் மற்றும் புகைப்படக் கலைஞராகவும்  வெற்றிகரமாக வலம் வருகிறார். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற நினைக்கும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு அபிஷேகின் இந்த வாழ்க்கைப்பயணம் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.