தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் , தனது வாடிக்கையாளர்களுக்கு ‘EPFO 3.0’ என்ற புதிய டிஜிட்டல் முறையை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுப்பது இனி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பது போலவே மிக எளிதாக மாறும்.
2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்தத் திட்டத்தின் கீழ், பிஎஃப் சந்தாதாரர்களுக்கு ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன் மூலம் நேரடியாக ஏடிஎம் மையங்களிலோ அல்லது யுபிஐ மூலமாகவோ தங்களுக்குத் தேவையான பணத்தை உடனுக்குடன் எடுத்துக் கொள்ள முடியும்.
இந்த வசதியைப் பெற, வாடிக்கையாளர்கள் தங்களது யுஏஎன் எண்ணுடன் ஆதார், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கை முறையாக இணைத்திருக்க வேண்டும். அவசரத் தேவைகளுக்காக பிஎஃப் கணக்கில் உள்ள மொத்தத் தொகையில் 50 சதவீதம் வரை இப்படி எளிதாக எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது.
இதற்காக 32 அரசு மற்றும் தனியார் வங்கிகளுடன் EPFO ஒப்பந்தம் செய்துள்ளது. இனி பிஎஃப் பணத்தைப் பெற அலுவலகங்களுக்கு அலைந்து காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
