ஜார்கண்ட் மாநிலம் பகுதியில், இரும்பு கழிவுகளைத் திருட முயன்றபோது விஷவாயு தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணியளவில், ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்த இரும்பு கழிவுகளைத் திருடச் சென்றுள்ளது.

அப்போது, ரசாயன வாயு நிரப்பப்பட்டிருந்த ஒரு சிலிண்டரை அவர்கள் வெட்டித் திருட முயன்றபோது, அதிலிருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி ஐந்து பேரும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தனர். தகவலறிந்து வந்தவர்கள், மயங்கிக் கிடந்த ஐந்து பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள இரண்டு பேருக்குத் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்தும், திருட்டு முயற்சியின் பின்னணி குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.