இந்திய ரயில்வேயை நவீனப்படுத்தும் முயற்சியாக, புதிய ‘அமிர்த பாரத்’ ரயிலின் மாதிரி பெட்டிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் ஆய்வு செய்தார். இந்த அடுத்த தலைமுறை ரயில் பெட்டிகள் ஒரு அரண்மனையைப் போல மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

உயர்தரமான தரை விரிப்புகள், கண்களுக்குக் குளிர்ச்சி தரும் ஜன்னல் திரைகள் மற்றும் சொகுசான இருக்கைகள் என இந்த ரயிலின் உட்புறம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலைப் போன்ற உணர்வைத் தருகிறது. குறிப்பாக, இதன் கழிவறைகள் மற்றும் வாஷ் பேசின்கள் மிகவும் நவீனமாகவும், தூய்மையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயிலின் வீடியோவை அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது லட்சக்கணக்கான மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு அம்சங்களுக்காக இதில் தீப்பிடிக்காத HL3 ரகப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

“>

 

இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள், “இது ரயில் பெட்டியா அல்லது ஐந்து நட்சத்திர ஹோட்டலா?” என வியந்து பாராட்டி வருகின்றனர். அதே சமயம், இந்த ரயிலின் பயணக் கட்டணம் சாமானிய மக்களும் ஏறும் வகையில் குறைவாக இருக்க வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.