மும்பையைச் சேர்ந்த ‘பாபா ஜான்’ என்றழைக்கப்படும் அப்துல் ரஷீத் என்ற போலிச் சாமியார், ஒரு பெண்ணை ஏமாற்றித் தொடர்ச்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

அந்தப் பெண்ணின் குடும்பப் பிரச்சனைகளுக்கும், மகளின் உடல்நலக் குறைவுக்கும் ‘செய்வினை’ மற்றும் ‘பில்லி சூனியம்’ தான் காரணம் என்று கூறி அந்தச் சாமியார் நம்ப வைத்துள்ளார்.

இந்தப் பாதிப்புகளை நீக்குவதாகக் கூறி, கடந்த 2024 ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மஹாட் மற்றும் பன்வெல் ஆகிய இடங்களுக்கு அந்தப் பெண்ணை வரவழைத்து பலமுறை சீரழித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் சாந்தாரூஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மகாராஷ்டிராவின் மாந்திரீகத் தடைச் சட்டத்தின் கீழ் அந்தப் போலிச் சாமியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே நாசிக்கில் அசோக் கராத் என்ற போலிச் சாமியார் நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த அடுத்தடுத்த புகார்கள் வெளிவந்துள்ளன.

இதுபோன்ற போலிச் சாமியார்களிடம் மக்கள் ஏமாற வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.