சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மோகத்தால் இளைஞர்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல் பங்க் ஒன்றில் வாலிபர் ஒருவர் தனது பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றி வீடியோ எடுத்த அதிர்ச்சியூட்டும் காட்சி வைரலாகி வருகிறது.

இந்த ஆபத்தான செயலால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பிருந்தும், அங்கிருந்த ஊழியர்கள் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

“>

 

உயிர் பாதுகாப்பு குறித்த அக்கறையின்றி லைக்குகளுக்காக நடத்தப்பட்ட இந்த விபரீத விளையாட்டு, தற்போது பெட்ரோல் பங்க் ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மை குறித்த பெரிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.