சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு உயர்ந்த கட்டிடத்தின் ஜன்னல் அருகில் நிற்கும் பெண் ஒருவர், தான் கையில் வைத்திருக்கும் கட்டுகளில் இருந்து 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி அள்ளி கீழே வீசுகிறார்.

பணம் காற்றில் பறந்து கீழே விழுவதைக் கண்டதும், சாலையில் சென்ற மக்கள் வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு, பணத்தை எடுக்க ஓடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளது.

எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்த்து வரும் நிலையில், பலரும் அந்தப் பெண்ணின் செயலைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது போன்ற செயல்கள் தேவையற்ற விளம்பரத்திற்காகவும், மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் செய்யப்படுவதாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

“நேர்மையாக உழைத்து சம்பாதித்த பணம் இப்படிச் சாலையில் வீசப்படாது, இதன் பின்னணியில் ஏதோ மர்மம் இருக்கிறது” என்று வீடியோவைப் பார்த்தவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

எந்த ஒரு பொறுப்புணர்வும் இன்றி பொதுமக்களைச் சாலையில் மோதவிட்ட அந்தப் பெண்ணின் செயல், தற்போது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.