கோவாவிற்கு சுற்றுலா வந்த குளோ என்ற வெளிநாட்டுப் பயணி, இந்தியாவின் ‘குயிக்-காமர்ஸ்’ செயலி மூலம் மளிகைப் பொருட்களை வாங்கிய தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். மல்லித்தழை, பூண்டு, தக்காளி மற்றும் நாய் உணவு போன்ற அன்றாடத் தேவைகளை ஆர்டர் செய்த 29 நிமிடங்களிலேயே அவை அவரது இல்லத்திற்கு வந்தடைந்தன.

தனது சொந்த நாடான இங்கிலாந்தில் இவ்வளவு வேகமாகவும், எளிதாகவும் டெலிவரி கிடைப்பது அரிது என்று அவர் வியப்புடன் தெரிவித்துள்ளார். இந்த அனுபவத்தில் குளோவை மிகவும் கவர்ந்தது பொருட்களின் மலிவான விலைதான்.

சுமார் 822 ரூபாய்க்கு (7.50 பவுண்டுகள்) பல மளிகைப் பொருட்களை வாங்கிய அவர், இங்கிலாந்தோடு ஒப்பிடும்போது இந்தியாவில் விலை மிகவும் குறைவு எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நாய் உணவின் விலை இங்கிலாந்தை விட இங்கு மிகவும் குறைவாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Chlo|Travels (@solowithchlox)

“>

இந்தியாவின் இந்த அதிவேக டெலிவரி சேவை வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கூட அன்றாட வாழ்வை எவ்வளவு எளிதாக்குகிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.