உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில், ஐந்து குழந்தைகளுக்குத் தாயான பெண் ஒருவர் தனது கள்ளக்காதலனுடன் தப்பிச் செல்வதற்காகச் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த ஐந்து பிஞ்சு குழந்தைகளுக்கும் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து மயக்கமடையச் செய்த அந்தப் பெண், பின்னர் வீட்டைத் தாளிட்டுவிட்டு நகை மற்றும் பணத்துடன் காதலனுடன் ஓடியுள்ளார்.
Mother of five in Rampur, UP, confesses to drugging all her children with sleeping pills just so she could run away with a lover half her age. Shocking case of child endangerment.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 29, 2026
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உத்தரப் பிரதேச மாநில போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் தப்பியோடிய சில மணிநேரங்களிலேயே கைது செய்தனர். மயக்கத்தில் இருந்த குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு தாய் தனது கள்ளக்காதலுக்காகச் சொந்தக் குழந்தைகளையே இப்படி ஆபத்தில் தள்ளிய சம்பவம் அந்த மாநிலம் முழுவதையும் உறைய வைத்துள்ளது.
