உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ஷாப்பூர் பகுதியில், வெறும் 50 ரூபாய் தள்ளுபடி தராததற்காக உலர் சலவை கடை பெண் ஊழியரை ஒரு பெண் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
750 ரூபாய் கட்டணத்திற்கு 50 ரூபாய் குறைக்கும்படி அந்தப் பெண் கேட்டுள்ளார்; அதற்கு வரவேற்பாளர் மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், அவரை சரமாரியாக அறைந்துள்ளார். இந்தச் செயல் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
In Gorakhpur’s Shahpur, a woman assaulted a dry cleaning receptionist over a ₹50 discount on ₹750 service. Slapped her on CCTV after refusal. FIR registered, ID via footage.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 28, 2026
“>
இந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளதோடு, தாக்குதலில் ஈடுபட்ட அந்தப் பெண்ணை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
