லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் விளையாட்டு உலகில் வெற்றி என்பது எவ்வளவு முக்கியமானது என்பது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஒரு விளையாட்டு அணி எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும், இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்லாதவரை அந்த அணிக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “நீங்கள் வெற்றி பெறும் வரை, மக்கள் உங்களை அதே மரியாதையுடன் பார்ப்பதில்லை” என்று குறிப்பிட்டுள்ள அவர், விளையாட்டில் முடிவுகளே ஒரு அணியின் தரத்தை தீர்மானிக்கின்றன என்பதை அழுத்தமாகக் கூறியுள்ளார். கடந்த காலங்களில் லக்னோ அணி ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், சாம்பியன் பட்டத்தை வெல்வதே தற்போதைய முதன்மை இலக்கு என்பதை இவரது பேச்சு உணர்த்துகிறது.

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் வணிக ரீதியான வெற்றி என அனைத்தும் ஒரு அணியின் வெற்றியுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளதால், வரும் காலங்களில் லக்னோ அணி இன்னும் தீவிரமான உத்திகளுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கருத்து தற்பொழுது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.