மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது, கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது செல்போன் தொடர்ந்து ஒலித்தது. பார்வையாளர்கள் மத்தியில் இது குறித்து சிறு சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சுனில் கவாஸ்கர் புன்னகையுடன் அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். அழைப்பாளர் தனது மனைவிதான் என்பதை அவரே மேடையில் வெளிப்படையாகக் கூறியது அனைவரையும் ரசிக்க வைத்தது.
A recent video of legendary Indian cricketer Sunil Gavaskar has gone viral on social media, winning hearts across the internet. In the clip, Gavaskar pauses his speech mid-way at a Rotary event to answer a call from his wife, leaving the audience smiling and touched by the candid… pic.twitter.com/WYN0JgY3LC
— News18 (@CNNnews18) June 6, 2026
“>
இந்த சுவாரசியமான சம்பவத்தின் போது, தனது பேச்சைக் குறைத்துக்கொள்ளுமாறு மனைவி நினைவூட்டுவதற்காகவே இந்த அழைப்பு வந்ததாக கவாஸ்கர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஒரு முக்கியமான நிகழ்ச்சியிலும் தனது மனைவியின் அக்கறையையும், அந்த அழைப்பை அவர் முக்கியமாகக் கருதிய விதமும் சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு, தற்போது வைரலாகி வருகிறது.
