IPL 2026-இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய டி20 அணியில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து, மிக இளம் வயதிலேயே இந்திய ஆடவர் அணியில் தேர்வான வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இருப்பினும், அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சேர்ப்பது குறித்த கேள்விக்கு, தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் எச்சரிக்கையுடன் பதிலளித்துள்ளார். அவர் இன்னும் சிறுவன் என்றும், இப்போது அவர் சிறப்பாகச் செயல்படும் டி20 வடிவத்திற்கு மட்டுமே தேர்வாகியுள்ளார் என்றும், ரெட் பால் கிரிக்கெட்டில் அவர் களமிறங்கி அனுபவம் பெறுவதற்கு இன்னும் காலம் தேவை என்றும் அகர்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
