ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா நகரில் கியாஸ் சிலிண்டரில் எரிவாயுவிற்குப் பதிலாகத் தண்ணீரை நிரப்பி விநியோகம் செய்துள்ள அதிர்ச்சிகரமான மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட சிலிண்டர்களைப் பயன்படுத்த முயன்றபோது, அடுப்பு எரியாததைக் கண்டு மக்கள் சந்தேகமடைந்துள்ளனர்.

சிலிண்டரைச் சோதித்துப் பார்த்தபோது, அதற்குள் கேஸ் நிரப்பப்படுவதற்குப் பதிலாக அதிக அளவில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலிண்டர் விநியோகஸ்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பணத்தை முழுமையாகப் பெற்றுக்கொண்டு இப்படி உயிருக்கு ஆபத்தான முறையில் மோசடி செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்துப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், சிலிண்டர்களில் தண்ணீரை நிரப்பி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.