சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2720 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்று மாலை மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 2000 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு சவரன் ரூ.1,06,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14,455 ரூபாய்க்கும், ஒரு சவரன் 115640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது