தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று இரவு நேரில் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போதே இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் தங்களுக்கு 10 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்கப்படும் என தேமுதிக தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்காக அறிவாலயத்தில் இன்று இரவு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
