சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 5360 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,03,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 14127 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,016 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,50,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
