திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கியத் திருக்கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா வரும் ஏப்ரல் 1-ம் தேதி (புதன்கிழமை) மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்த ஏதுவாக, நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகுமார் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறையால் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இருப்பினும், 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அவசர காலப் பணிகளுக்காகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் முக்கிய அரசு அலுவலகங்கள் மட்டும் செயல்படும் என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஏப்ரல் மாதம் மற்றொரு சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.