சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு காலை நேரத்தில் 2160 ரூபாய் வரையில் குறைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது மாலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி தற்போது 3200 ரூபாய் வரையில் குறைந்துள்ளது.
இதன் காரணமாக இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 5360 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,11,200
ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15163 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,21,304 ரூபாய் க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
