மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நாளை ஒரு முக்கியமான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறும் இந்த திடீர் ஆலோசனைக்கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.