தற்போதைய காலகட்டத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையிலான மோதல் தொடர்பான காணொளிகள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வரும் நிலையில் ஒரு முதியவர் தனது மருமகளுக்கு சமையலில் உதவி செய்யும் நெகிழ்ச்சியான காட்சி சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
महिला के पति बाहर काम करते हैं, सास नहीं है और इस महिला का हाथ टूट गया है तो खाना बनाने में ससुर जी मदद कर रहे हैं।
ऐसा परिवार सबको नसीब नहीं होता हैं। pic.twitter.com/FKOxFasQtP
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) March 18, 2026
கை உடைந்த நிலையில் காயத்துடன் தவிக்கும் தனது மருமகள் சமையல் செய்ய சிரமப்படுவதைக் கண்ட அந்த மாமனார் அவருக்கு உதவியாக மாவு உருண்டைகளைத் தேய்த்துக் கொடுக்க அந்தப் பெண் அடுப்பில் ரொட்டி சுடும் காட்சிகள் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தத் தியாகம் மற்றும் அன்பின் வெளிப்பாடாகத் திகழும் இந்த நிகழ்வு குறித்த காணொளியை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளதோடு இத்தகைய பண்பான குடும்பம் அமைவது ஒருவருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பாக்கியம் என்றும் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதையே இது காட்டுகிறது என்றும் இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
