ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா இடிந்து விழுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் வெளியான இந்தக் காணொலியை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வந்த நிலையில் இது குறித்த உண்மைத் தன்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் போலியான காணொலி மிகவும் தத்ரூபமாக இருந்ததால் இணையவாசிகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து ஈரான் நடத்திய பதில் தாக்குதலில் புர்ஜ் கலிஃபா தகர்க்கப்பட்டதாகவும் பரவிய செய்திகள் முற்றிலும் வதந்தி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இத்தகைய போலிச் செய்திகள் பரப்பப்படுவதற்கு சமூக வலைதளப் பயனாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.