தமிழகம் முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தலைப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உங்கள் கனவை சொல்லுங்கள் நிறைவேற்றுகிறேன் என்று முதலமைச்சர் கூறுகிறார். எனக்கு நயன்தாரா வேண்டும். எனக்கு அவரை கொடுப்பாரா என்று சர்ச்சையாக பேசினார். இதற்கு தற்போது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டணம் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் முன்னாள் அமைச்சர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அதாவது திண்டுக்கல் சீனிவாசன் திமுக அரசு தற்போது ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. இது நூறு ரூபாய்க்கு வெளியில் கிடைக்கும். அதன் பிறகு சமீபத்தில் சேலை கொடுத்திருக்கிறார்கள். சேலை கொடுத்தால் போதுமா பாவாடை கொடுக்க வேண்டுமா..? பாவாடை இல்லாமல் எப்படி சேலை கட்ட முடியும் என்று பொம்பளைகள் எல்லோரும் கேட்கிறார்கள் என்றார். மேலும் அடுத்தடுத்து இவ்வாறு முன்னாள் அமைச்சர்கள் பெண்கள் குறித்து பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசனும் சர்ச்சை பேச்சு#AIADMK #DindigulSrinivasan #CVShanmugam #TamilNaduPolitics #PoliticalControversy #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/Ilz27kGz3l
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 17, 2026
View this post on Instagram
